வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் குடியாத்தம் காட்பாடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லூரி வளாக பின்புறம் உள்ள மைதானம் அருகே சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் மேலாளத்தூர் கொன்னையாத்தம் பகுதியை சேர்ந்த சிவகுமார் /மகன் வினோத்குமார் (வயது 27 ) என்பதும் கஞ்சா விற்பனை ஈடுபட்டதும் தெரிய வந்தது. உடனடியாக அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து வினோத்தை கைது செய்தனர் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment