திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேச பிரபு. பல்லடம் பகுதியில் நடைபெறும் முறைகேடான விஷயங்களை செய்தி வெளியிட்டதற்காக ரவுடி கும்பலால் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு தற்போது கோவையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தைக் பாதுகாக்க பணியாற்றும் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ந்து அடையாளம் தெரியாத கும்பல்களாலும் ரவுடி கும்பல்களாலும் தாக்குதல்கள் தினம் தோறும் நடைபெற்று வருகிறது.
பத்திரிக்கையாளர்களின் நலனை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், பல்லடம் செய்தியாளர் நேச பிரபுவிற்கு உயர்சிகிச்சை அளிக்க தமிழக அரசுமுன் வர வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். என தமிழக அரசுக்கு இதன் கண்டனம் மூலம் தெரிவிக்கப்பட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பார்த்தசாரதியிடம் அனைத்து பத்திரிகையாளர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர் மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் பேர்ணம்பட் கேவி குப்பம் பள்ளிகொண்டா என அனைத்து செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்டு பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment