வேலூர் மாவட்டம், வேலூர் பாலாற்றில் உள்ள மயானத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆதரவில்லாமல் இறந்த 3 முதியவர்களின் உடல்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது அதனை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் உரிய அனுமதியை பெற்று காவல்துறை பாதுகாப்புடன் வேலூர் பாலாற்று மயானத்தில் தனது சொந்த செலவில் அனைத்து சடங்கு சாங்கிய சம்பிரதாயங்களையும் செய்து நல்லடக்கம் செய்து அடக்கம் செய்த சமாதிகளின் மீது மலர்கள் துளசி இலைகளை தூவி ஆன்மாக்கள் சாந்தியடைய வேண்டி பிரார்த்தனையும் செய்தார்.
இவர் இதுவரையில் இது போன்று தமிழக முழுவதும் இதுவரையில் ஆதரவில்லாமல் இறந்த 2278 பேரின் உடல்களை மணிமாறன் நல்லடக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
No comments:
Post a Comment