வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளி மலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆன்மீக சிந்தனையார்கள் நற்பணி மன்றம் ஆலய உழவார தொண்டு சீர் திருக்கூட்டம் ஸ்ரீ ஹரிஓம் யோக நரசிம்ம ஸ்வாமி பக்தனை சேவா சங்கம் சார்பில் 31 ஆம் ஆண்டு படி உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது, இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடியுடன் கிரிவலம் சுற்றி வந்து மலைக்கோவிலில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு காவடி மற்றும் பால் குடத்துடன் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பியவாறு படி உற்சவம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மலைக்கோவில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்று விபூதிகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியே பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கினர்.
.jpg)
.jpg)
No comments:
Post a Comment