தொடர்ந்து 76 மாதம் நிவாரண பொருட்கள் வழங்கிவரும் சமூக ஆர்வலர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 28 January 2024

தொடர்ந்து 76 மாதம் நிவாரண பொருட்கள் வழங்கிவரும் சமூக ஆர்வலர்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள எஸ் டி எஸ் திருமண மண்டபத்தில்  28-1 2024 இன்று 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்க மாற்று திறனாளிகள் திருநங்கைகள் விதவைகள் சலவை தொழிலாளர் என்று மாதந்தோறும் 100 நபர்களுக்கு அரிசி பருப்பு சேமியா ரவை போன்ற நிவாரண பொருட்கள் மாதந்தோறும் வழங்கி தற்போது 76 வது மாதமாக இன்று வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மக்கள் சேவகர் கே வி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் கங்காதேவி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிகள் முன்னாள் நகர மன்ற உறுப்பினரும் கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கம் தலைவர் வி இ கருணா கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.


இதில் பேரணாம்பட்டு எம் வி குப்பம் கே வி குப்பம் சேம் பள்ளி பரதராமி ஆகிய பகுதிகள் இருந்து மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகள் சலவை தொழிலாளர்கள் என்று 100 நபர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் 76 வது மாதமாக நிவாரண பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இறுதியில் குமரன் நன்றி கூறினார்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad