பொன்னை 4 ரோடு பகுதியில் கல்வெர்ட் அமைக்கும் பணி தீவிரம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 January 2024

பொன்னை 4 ரோடு பகுதியில் கல்வெர்ட் அமைக்கும் பணி தீவிரம்.


காட்பாடி தாலுகா பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி மதிப்பில் சிறு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொன்னை நான்கு ரோடு பகுதியில் சிறு பாலம் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் குமரேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. 

அப்பொழுது ரெடிமேட் சிமெண்ட் கால்வாய்கள் வரவழைக்கப்பட்டு பொன்னை நான்கு ரோடு பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சிறுபாலம் அமைக்கப்பட்டது.தொடர்ந்து பொன்னை சித்தூர நெடுஞ்சாலை மற்றும் பொன்னை திருவலம் நெடுஞ்சாலை பகுதியில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணிகளை உதவி செயற்பொறியாளர் குமரேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மேலும் பொன்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் சாலையில் பழைய தரைபாலம் பகுதியில் சிறு பாலம் அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார். அப்பொழுது பொன்னை ஏரி பகுதியில் இருந்து வெளியேறும் உபரி நீர் பொன்னைபுதிய மேம்பாலம் பகுதியில் தேங்க வாய்ப்புள்ளதாகவும் இதனை தவிர்ப்பதற்காக பொன்னை தலைப்பாலம் பகுதியில் புதிய சிறுபாலம் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad