பதவி உயர்வு பெற்ற வேலூர் சரக துணைத்தலைவர் முத்துசாமிக்கு ரெட்கிராஸ் சார்பில் வாழ்த்து. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 January 2024

பதவி உயர்வு பெற்ற வேலூர் சரக துணைத்தலைவர் முத்துசாமிக்கு ரெட்கிராஸ் சார்பில் வாழ்த்து.


வேலூர் காவல் சரக துணைத் தலைவர்  எம்.எஸ்.முத்துசாமி அவர்கள் காவல் துறையின் தலைவராக பதவி உயர்வு பெற்று செல்ல உள்ளதால் அவர்களை வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பிலும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பிலும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் ஆங்கில புத்தாண்டு காலண்டர் வழங்கிய பின்னர் பேசிய துணைத்தலைவர் அவர்கள் காட்பாடி ரெட்கிராஸ் சங்க செயல்பாடுகள் பாராட்டுதலுக்குரியது தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துகளை தெரிவித்தார். 


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad