தன்னலமற்ற மனிதநேய சேவைகளை செய்து வரும் தங்கக்கோவில்! ராம் நாத் கோவிந்த் புகழாரம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 5 January 2024

தன்னலமற்ற மனிதநேய சேவைகளை செய்து வரும் தங்கக்கோவில்! ராம் நாத் கோவிந்த் புகழாரம்!


ஸ்ரீபுரம் நாராயணி தங்ககோவில் ஆன்மீக சேவையுடன் தன்னலமற்ற மனிதநேய சேவைகளையும் செய்து வருகிறது, நிறுவனர் சக்தியம்மா ஜெயந்தி விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு, வேலூர்மாவட்டம், அரியூர், ஸ்ரீபுர தங்க கோவில் நிறுவனர் சக்தியம்மாவின் 48 ஆவது ஜெயந்தி விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கி வைத்தார்.  இதில் ஜார்கண்ட் மாநில  ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மேயர் சுஜாதா  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மாவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கி வேதமந்திரங்கள் முழங்க வாழ்த்துக்களை தெரிவித்தனர், இவ்விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசுகையில் இந்த பொற்கோவில் இந்தியாவிலேயே மிகவும் பெரிய பொற்கோவிலாக திகழ்கிறது இங்கு ஆன்மிக சேவை மக்களுக்கு செய்வதுடன் சுற்றுசூழல் பாதுகாப்பு மருத்துவம் கல்வி மேம்பாடு உள்ளிட்ட மனிதநேயத்துடன் தன்னலமற்ற சேவைகளும் நாராயணி பீடம் செய்து வருவதாக பாராட்டி பேசினார். இவ்விழாவில் திரளான பக்தர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad