வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குகையநல்லூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் வசித்து வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை கட்டி வாழ்ந்து வந்தனர். இன்று நீர்வளத்துறை அதிகாரிகளால் வீடுகளை இடித்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
நீர் பரப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்ற கோரி அதிகாரிகளின் சார்பில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து விட்டதால் இன்று கட்டிடங்களை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. அப்பகுதியில் வசித்து வந்த 17 குடும்பத்தினருக்கு மட்டுமே காட்பாடி அடுத்த புதூர் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது மீதம் உள்ளவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாத இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.
No comments:
Post a Comment