நம்பர் ஒன் இயக்கத்தின் வேலூர் மண்டல அளவில் சிறந்த கைவினை கலைஞர்களுக்கும் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கும் விருது வழங்கும் விழா வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் அமைந்துள்ள ஜெ.எஸ்.திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு நகைத்தொழிலாளர் சங்க கௌரவத் தலைவர் வி.பி.எம்.மோகனவேல் தலைமை தாங்கினார். நம்பர் ஒன் இயக்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் எஸ்.முத்துரட்சகன் இயக்க செயல்பாடுகளை விளக்கி பேசினார். முன்னதாக செயலாளர் கே.என்.பாஸ்கர் வரவேற்று பேசினார்.
அபிராமி மகளிர் கல்லூரியின் தலைவர் எம்.என்.ஜோதிகுமார், கே.இன்பநாதன், அம்.சோக்குமார், எம்.ஆர்.கணேஷ், திருமுருகன் துரைராஜ், ரவி ஆம்பூர் ஆர்.பத்மநாபன், ராஜேந்திரன் நாகைய்யா, வசந்தன் எம்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் வை.நடனசிகாமணி, தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், தொழிலாளர் துணை ஆய்வாளர் சி.தேஜோமூர்த்தி, ஆரணி வழக்கறிஞர் வி.வெங்கடேசன், பொள்ளாச்சி கனகராஜ், சென்னை சீனிவாசன், ஓசூர் என்.சுந்தர்ராஜன், தருமபுரி சத்யமூர்த்தி, கிருஷ்ணகிரி பி.ராஜேந்திரன், ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் ஆர்.பத்மநாபன், மகளிர் அணி அமைப்பாளர் அமுதா உள்ளிட்டோடருக்கு சால்வை அணிவித்து கேடயம் அளித்து சரித்திர சாதனையாளர் விருதுகளை பொதுச்செயலாளர் எஸ்.முத்துரட்சகன், அபிராமி கல்லூரி தலைவர் எம்.என்.ஜோதிகுமார் ஆகியோரால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விழாவில் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜார்த்தனன் நன்றி தெரிவித்தார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment