வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2024 ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல துணை வட்டாட்சியர் சுபிசந்தர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகள் தலைமையிடத்து வட்டாட்சியர் சிவசங்கர் கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராம பாஸ்கர் மேற்கு வருவாய் ஆய்வாளர் தங்கமணி வனவர் மாசிலாமணி தோட்டக்கலை அலுவலர் தமிழரசி சமூக பாதுகாப்பு திட்ட உதவியாளர் பிரகாசம் வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் சாமிநாதன் துரை செல்வம் ஹரி கிருஷ்ணன் சம்பத் நாயுடு சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். செவ்வாய்க்கிழமையில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
- விவசாயப் பணிகளுக்கு 100 நாள் பணியாளர்களை பயன்படுத்த வேண்டும்.
- கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு மாட்டு கொட்டகை அமைத்து தர வேண்டும்.
- குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை அமைக்க வேண்டும்.
- வெள்ளேரி பகுதியில் பகுதி நேர கால்நடை மருத்துவர் நியமனம் செய்ய வேண்டும்.
- செட்டிகுப்பம் சர்வே எண் 156 இல் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
இதில் குடியாத்தம் பேர்ணாம்பட்டு கே வி குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment