வேலூர் மாவட்டம் குடியாத்தம் டாக்டர் கிருஷ்ணசுவாமி மெட்ரிக் பள்ளியில் குடியரசுதினம் முதல்வர் எம்.ஆர்.மணி, நிர்வாக அலுவலர் கே.மலர்விழி முன்னிலையில் தாளாளர் டாக்டர் கிருஷ்ணசுவாமி கொடி அணிவகுப்பை ஏற்று, தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் லட்சுமி நரசிம்மன் உரை யாற்றினார். மாணவ, மாணவிகளின் மனித பிரமிடு, தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு, தனி மற்றும் குழு நடனம், பட்டி மன்றம், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி அனைத்தையும் மாணவிகள் ப்ரீத்திகா மற்றும் தேஜஷ்ஸ்ரீ ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment