நிகழ்வில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் G.சுரேஷ் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பழனிவேல், பெரியதம்பி, நசுருதீன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரையான் ஆகியோர் முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் வேலூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் தேவகிராணி ராஜேந்திரன், சக்கரவர்த்தி, முனுசாமி, மாவட்ட செயலாளர்கள் ஆனந்தவேல், உவைஸ் நகர நிர்வாகிகள் கோவிந்தசாமி, சுஹைல், புஷ்பராஜ், வில்சன், சக்திவேல், சதீஷ், கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ரஜினிகாந்த் நன்றியுரை ஆற்றினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment