வேலூர் ஓபிஎஸ் அணி அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் என்.சந்தோஷ்குமார், மாவட்ட செயலாளர் முனைவர் எஸ் கோதண்டன் ஆகியோர் மொழிப்போர் தியாகிகள் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் ஓபிஎஸ் அணி அதிமுக மாவட்ட அவைத்தலைவர் துரை, மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார், அணைக்கட்டு தொகுதி செயலாளர் ஏபிகணேசன், கேவிகுப்பம் தொகுதி செயலாளர் ரவி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாராயணன், சக்தி, சதீஷ் குமார், ஒன்றிய செயலாளர் தயாளன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment