நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் மதரஸாயே தாரூல் ஹஸனாத் மாணவர்களின் தற்காப்புகலை சிலம்பம், கராத்தே, நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
சிறந்த மாணவர்களுக்கு டிரஸ்ட்டின் சார்பாக பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக ஜனாப், மஹபூப் பாஷா, ஜனாப், நவாப் ஜான், பட்டேல் நவ்ஷாத், திரு. பாலாஜி, திரு. சிவா, ஜனாப் அயாத் பாஷா, சகோ. ஜாபர், சகோ. கவுசி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த கிளை நிர்வாகிகள் அப்துல் ரஹ்மான், அத்தீக் அஹ்மத், அப்துல் கைசர், இர்பான், ஹாதிபாஷா, மற்றும் உறுப்பினர்களுக்கு தலைமையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:
Post a Comment