இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அமலுதிமுக விஜயன், நகர திமுக அவைத் தலைவர் ககோ.நெடுஞ்செழியன் கூட்டத்தில் தலைமை பேச்சாளர்கள் சிவ ஜெயராஜ், கோவை சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் க.கோ.நெடுஞ்செழியன், வசந்தா ஆறுமுகம், நகர மன்ற உறுப்பினர்கள் ஜிஎஸ்.அரசு, ம.மனோஜ், எம் எஸ் குகன், சுமதி மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திமுக மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் பேசுகையில் தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் குடியாத்தம் தொகுதிக்கு பல்வேறு சலுகைகளை அளித்துள்ளார், அதன்படி குடியாத்தம் அரசு மருத்துவமனை சுமார் 40 கோடிக்கு புதிய கட்டிடம் கட்டித் தரவும் சுமார் 109 கோடி ரூபாயில் புறவழி சாலை அமைக்கவும் கவுண்டன்யமகா நதி கங்கை அம்மன் கோவில் அருகில் மேம்பாலம் கட்டி தரவும் சுமார் 13 கோடி ரூபாய் அளவில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார், இது போன்ற எண்ணற்ற சலுகைகளை குடியாத்தம் தொகுதிக்கு வழங்கி உள்ளார் என்று பேசினார். இறுதியில் மோனிஷ் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment