வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பரதராமி அடுத்த பூசாரி வலசை கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் (வயது 25) இவர் உறவினர் திருமணத்திற்கு ஆம்பூர் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குடியாத்தம் ஆர் எஸ் ரோடு வைத்தீஸ்வரன் நகர் அருகே சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக வந்து தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவரது முகம் தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்தார். படுகாயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக நகர போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
.jpg)
No comments:
Post a Comment