வேலூர் மாவட்டம் குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள ஶ்ரீ அபிராமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 1 2024 இன்று மாணவிகளுக்கு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் எம் என் ஜோதி குமார் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் வ ஆ ராவமுதன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி மேற்கண்டு வரும் கல்வி சார் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக எம் ஜி ஆர் கல்வி மாற்றம் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் வேந்தர் ஏசி சண்முகம் அவர்கள் கலந்து கொண்டார்.
கல்லூரி இயக்குனர் ஜோதிராம் அவர்கள் பட்டமளிப்புவிழா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர் பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார். மாணவிகளுக்கு பதக்கங்களையும் பல்கலைக்கழக தரவரிசை குறிப்பீடுகளும் மற்றும் பட்டங்களையும் வழங்கினார். மேலும் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றும் போது இந்தியாவின் அரிய மருத்துவம் பற்றியும் இளைஞர்கள் எவ்வாறு நாட்டின் மகத்துவத்தை பேணி க் காப்பது என்பதைப் பற்றியும் மிகச் சிறப்பாக சிறப்புரையாற்றினார் .இவ்விழாவில் 780 மாணவிகள் பட்டங்கள் பெற்றனர்.
இப்பட்டமளிப்பது விழாவில் கல்லூரி துணை தலைவர் எம் பிரகாசம் நிர்வாக அலுவலர் கே முருகவேல் மற்றும் அனைத்து அறங்காவலர்களும் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழா ஏற்பாட்டினை கல்லூரி துணை முதல்வர் முனவர் எம். சுபாஷினி மாணவர் எம் சக்திவேல் அனைத்து ஆசிரியர்களும் அலுவலகப் பணியாளர்களும் மிகச் சிறப்பாக செய்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment