வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தில் நேற்று இரவு ஒரே நேரத்தில் தரணி, ஜெயவேலு, பாஸ்கர், தினேஷ், ராமமூர்த்தி ஆகிய விவசாய நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் பாசன கிணற்றில் உள்ள மின் மோட்டார்க்கு செல்லும் விலை உயர்ந்த வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் (மதிப்பு சுமார் 2 லட்சம்) மேலும் இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில விவசாய போர்வெல் மற்றும் கிணறுகளில் மின் வயர்கள் திருடப்பட்டுள்ளது.
மேலும் தொடர் மின் வயர் திருட்டு சம்பவங்களால் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தொடர் வயர் திருட்டு சம்பவங்களை தடுக்க விவசாயிகள் ஒருங்கிணைந்து புகார் அளிக்க குடியாத்தம் தாலூகா காவல் நிலையத்தில் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது. மேலும் மின் வயர்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment