வேலூர் மாவட்டம் காட்பாடியில் இயங்கி வரும் சன் லைட் கல்வி நிறுவனத்தின் நிறுவனர். S. அருண்குமார் தலைமையில் சன் லைட் அவார்டு 2024 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்காக சன் லைட் 2024 விருது வழங்கப்பட்டன, விருது வழங்கும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வேலூர் மேயர் சுஜாதா, திரையுலக நடிகை வடிவுக்கரசி, பேராசிரியர் மற்றும் நடிகருமான ஞானசம்பந்தம், விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் பல்வேறு கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கலந்து கொண்டனர். 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளின் தனித்திறமைகளை பாராட்டி விருதுகள் வழங்கி சிறப்பித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
.jpg)
No comments:
Post a Comment