ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் விஜயேந்திரன், தேவகிராணி ராஜேந்திரன், முனுசாமி, சக்கரவர்த்தி, பாஸ்கரன், சான்பாஷா, பாரத்.நவீன்குமார், சரவணன், செந்தில், ஆனந்தவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பேர்ணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான முஜம்மில் அஹமத் வரவேற்புரை ஆற்றினார்.
வட்டார தலைவர்கள் சங்கர், வீராங்கன், பெரியசாமி, தாண்டவமூர்த்தி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் திருமதி. கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன் ஆகியோர் துவக்கவுரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் நாட்டாம்கார் அக்பர், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவரும் , பேரணாம்பட்டு மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திருமதி. கிருஷ்ணவேணி ஜலந்தர், குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர மன்ற உறுப்பினருமான விஜயன், குடியாத்தம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோதி கணேசன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
நிகழ்வில் மாநில எஸ்ஸி பிரிவு பொதுச் செயலாளர் சுரேஷ், மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவர் நவாலி தாஹிர், மாவட்ட கலைப்பிரிவு தலைவர் காத்தவராயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முடிவில் பேரணாம்பட்டு கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவரும், ஒன்றிய குழு உறுப்பினருமான வழக்கறிஞர் ப.செல்வக்குமார் நன்றியுரை கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment