வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சுமார் 200- தலையணைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ரங்கா வாசுதேவன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் கண்ணன் ரவிச்சந்திரன் ராஜேந்திரன் செ.கு.வெங்கடேசன் ஹரிகிருஷ்ணன் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை மருத்துவ அலுவலர் மாறன் பாபு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் பாலச்சந்தர் கே எம் ஜி அறிவியல் கலை கல்லூரி நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் மு அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 200 தலையணைகளை மருத்துவமனைக்கு வழங்கினார்கள்.
இதில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர், இறுதியில் கணேசன் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment