வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றுப்பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வந்தவர்களை உச்சநீதி மன்றம் உத்தரின் பெயரில் வீடுகளை அப்புறப்படுத்தப்பட்டது. இன்று குடியாத்தம் புதிய நீதி கட்சி சார்பாக அதன் நகரச் செயலாளர் எஸ் ரமேஷ் தலைமையில் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் வீடுகளை இழந்தவருக்கு வீட்டுமனை பட்டா விரைவில் வழங்க மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் லோகநாதன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டு பாபு மாலா சிவகுமார் ஆர் கே மூர்த்தி பாரத் மகி ராஜ்குமார் இளஞ்செழியன் நகர பொறுப்பாளர்கள் வெங்கடேசன் குணசேகரன் சசிகுமார் சத்தியமூர்த்தி மகி பூபதி சுந்தரராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment