வேலூர் மாவட்டம் குடியாத்தம் பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் அண்ணா தொழிற்சங்கங்களின் தலைமையிலான C I T U பாட்டாளி தொழிற்சங்கம் H M S மதிமுக உள்பட 32 சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணிகளில் உள்ள போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை உடனே முடிக்க கோரியும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற 89-000 பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள 96 மாதகால பஞ்சபடி D A உடனே வழங்க கோரி பணி ஓய்வு மற்றவர்களின் பண பலன்களை வழங்க கோரியும் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த கோரியும் வாரிசுதாரர்களின் அடிப்படையில் பணியின் போது இறந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தகுதிக்கேற்ப வேலை உடனே வழங்க கோரியும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலை வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment