காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள சிருஷ்டி சிபிஎஸ்சி பள்ளியில் உத்சவ் விழா உலக கலாச்சாரம் என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மகிஜா பவுண்டேஷன் அறக்கட்டளையின் அறங்காவலர் மகாதேவன் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். பள்ளிகளின் தலைவர் எம். எஸ். சரவணன் வரவேற்றார்.
விழாவில் உலக கலாச்சாரத்தையும் பழங்கால வரலாற்றையும் பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. குறிப்பாக அலிபாபாவும் 40 திருடர்களும் அலாவுதீன் அற்புத விளக்கு என்ற நாடகங்கள் அனைவரையும் கவர்ந்தது. இதில் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment