இந்நிலையில் காட்பாடி உள் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனி உத்தரவின் பேரில், வட்ட காவல் ஆய்வாளர் பி.ரமேஷ் மற்றும் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர்ராமமூர்த்தி தலைமையிலானகாவல்துறை தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தனியார் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்து வரும் மோகனரங்கன் கொடுத்து புகாரின் அடிப்படையில், மடிக்கணினி திருடிய நபர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் அன்று பிற்பகல் 2:15 மணிக்கு நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் அதி வேகமாக வந்த போது தனிப்பிரிவு காவல் துறையினர் அவர்களை மடக்கி விசாரித்த போது முன்னுக்கு முரணாக பதில் அளித்தனர். உடனே இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா,மாதனூர் உடைய ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் மகன் உந்துருகன் (வயது27), திருப்பத்தூர் மாவட்டம், பிள்ளையார் கோவில் தெரு, மாதனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் முரளி மகன் ஆகிய இருவரும் தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மோகனரங்கன் என்பவரின் லேப்டாப் திருடியது தெரிய வந்தது. உடனே காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு காவல்துறைக்கு காட்பாடி உள்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பழனி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்.
No comments:
Post a Comment