வேலூர் மாவட்டம் குடியாத்தம் பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தின் நிறுவனர் மெல்வீன்ஜோன்ஸ் பிறந்தநாள் முன்னிட்டு குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் ஏழை எளிய மக்களுக்கு மளிகை தொகுப்பு அரிசி பருப்பு, வேஷ்டி சேலை கம்பளி உள்ளிட்ட பொருட்களை 100 நபர்களுக்கும் மேலும் தினசரி அன்னதான சேவை திட்ட கொடையாளர்கள் அன்னபூரணி மற்றும் வள்ளலார் கோட்டம் அன்னதான சேவை திட்ட அமைப்புகளுக்கு அரிசி முட்டைகள் பருப்பு சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் சங்ககட்டிடத்தில் இன்று காலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க தலைவர் டி. கமலஹாசன் தலைமை தாங்கினார் செயலாளர் முருகதாஸ் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் எஸ்.புவனேஸ்வரி மாவட்ட பொருளாளர் எம்கே.பொன்னம்பலம் எல்சிஐஎப் ஒருங்கினைப்பகளர் டாக்டர் என்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் வழங்கினர் உடன் முன்னாள் ஆளுநர் ரத்தின நடராஜன் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் காசிவிஸ்வநாதன் ஏ. சுரேஷ்குமார் விவேகானந்தம் ஜேஜிநாயுடு ஜெ. பாபு ஆசிரியர்கள் விஜய்ஆனந்த் அருள்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நெல்லூர்பேட்டை கற்பு ஈஸ்வரர் ஆலயத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் மாவட்ட லயன்ஸ் சங்க பொருளாளர் எம்கே. பொன்னம்பலம் சொர்ணம் வர்த்தக நிறுவன மேலாளர் சுஜாதா ஆகியோர்கள் வழங்கினார் .
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment