வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்யா சி.பி.எஸ்.இ பள்ளியில் பொங்கல் தின விழாவை முன்னிட்டு 12.01.24 சனிக்கிழமை அன்று பொங்கல் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவின் போது பள்ளி தலைவர் திரு R. G தண்டபாணி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். மேலும் மாணவர்களின் ஆடல், பாடல் ,கவிதை கட்டுரை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பள்ளி தலைவர் மற்றும் பள்ளி முதல்வர் அவர்கள் சிறப்புரையாற்றினார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹரிணி ஸ்ரீ நன்றியுரை வாசித்தார். அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இறுதியாக நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நடைபெற்றது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment