வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் இளையா நெல்லூர் சன் பிரதர்ஸ் சார்பில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தாலுகாவில் இருந்தும் 32 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டியை அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் இராசி தலித் குமார் துவக்கி வைத்தார்.
விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கோப்பையை அறிமுகம் செய்தார். உடன் நாட்டாமை அன்பழகன் உள்ளார். முதல் பரிசு ஆறடி கோப்பை இரண்டாம் பரிசு ஐந்து அடி கோப்பை மூன்றாம் பரிசு நான்கடி கோப்பை நான்காம் பரிசு மூன்று அடி கோப்பை போட்டியை இரவு பகல் ஆட்டமாக மின் ஒளியில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. போட்டி ஏற்பாட்டை சன் பிரதர்ஸ் இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment