அடிப்படை வசதிகள் வேண்டி வேலூர் மாநகராட்சி முற்றுகை போராட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 13 January 2024

அடிப்படை வசதிகள் வேண்டி வேலூர் மாநகராட்சி முற்றுகை போராட்டம்.


வேலூர் மாவட்டம் கஸ்பா பகுதியை ஒட்டியுள்ள சின்னைய்யா நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். போக்குவரத்துக்கான சாலை வசதி குடிநீர் குழாய் இணைப்பு கால்வாய் வசதி என அடிப்படை வசதிகளை செய்துதரச் சொல்லி நீண்ட நாட்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தாலும் அவர்களின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாத நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் வேலூர் மாநகராட்சி முற்றுகைப் போராட்டத்தை மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் அறிவித்தனர்.

இந்நிலையில் மாநகராட்சி மற்றும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் போராட்டக் குழுவினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தனர். கஸ்பா ஏஜாஸ் மாவட்ட செயலாளர் தலைமையில் எம் நவ்ஷாத் பொதுச் செயலாளர்.  SDPI கட்சி    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாநகர மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப்  கே புருஷோத்தமன் தேமுதிக மாவட்ட செயலாளர் . அ.முன்னா தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் க பா கௌரிசங்கர் மே 17 இயக்கம் ஷாஜகான் IMMK மாவட்ட தலைவர் முஹம்மத ஜாபர் நண்பர்கள் டிரஸ்ட் S.பைரோஸ் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா பொது செயலாளர் கற்பி பாலா சிறுத்தை கட்சி தலைமையில்   கட்சியின் பொறுப்பாளர்களும்   பல்வேறு அமைப்பு செயலாளர் கலந்து கொண்டனர்.


மாநகராட்சி துணை ஆணையர் செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் (வேலூர் தெற்கு,வேலூர் வடக்கு )  ஆகியோர் பங்குபெற்ற பேச்சுவார்த்தையில் சின்னையா நகர் பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளைப் பற்றியும் அவை இதுநாள் வரை தீர்க்கப்படாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதைப் பற்றியும் எடுத்துரைத்தினர்.


2 மணி நேரம் நடைபெற்ற இப்பேச்சு வார்த்தையில் பொது மக்களின் சார்பாக  தெரிவித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தனர். இப்பேச்சுவார்த்தையில் போராட்டத்தை முன்நின்று அறிவித்த மஜக மாவட்ட பொறுப்பாளர்களும் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி  மற்றும் பொது மக்கள் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad