வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஶ்ரீஅபிராமி சிபிஎஸ்இ பள்ளியின் 5வது ஆண்டு விழா பள்ளியின் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் எம்.ஜோதிகுமார் அவர்கள் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
ஸ்ரீஅபிராமி கல்லூரியின் இயக்குநர் ஜோதிராம், அறங்காவலர்கள் அன்பழகன், கோபிநாத், மான்மல் ஜெயின், பள்ளியின் பொருளாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் லதா ஜேக்கப் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
பள்ளி இயக்குநர் சுமிப்ரியா பள்ளியின் வளர்ச்சி குறித்து பேசினார். விழாவில் மாறுவேடப் போட்டி, மேற்கத்திய நடனம், பாரம்பரிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பின்னர், கடந்த மற்றும் நடப்பாண்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கேடயம் பாராட்டினர். முடிவில், பள்ளி ஆசிரியை சுனிதா நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment