வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டு விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு மூன்றாம் பருவ 2023-24ஆம் கல்வியாண்டிற்கு மூன்றாம் பருவ பாடநூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று பள்ளி துவங்கும் நாளில் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசும் பள்ளிக்கல்வித்துறையும் ஆணையிட்டதன் அடிப்படையில் 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பவரு பாடநூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அறையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளில் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் இன்று காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை கோ.சரளா வழங்கினார்.
தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் உதவித்தலைமையாசிரியை ரோசலின் பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல்நிலை உதவித்தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து, இடைநிலை உதவித்தலைமையாசிரியை கே.திருமொழி, உடற்கல்வி ஆசிரியை ஜி.கௌசல்யா ஆகியோர் உடனிருந்தனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment