வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு சேத்துவண்டை முதல் நெள்ளூர் பேட்டை வரை குடியாத்தம் நகரத்திற்கு புறவழிச்சாலையாக 7 கிலோமீட்டர் அமைக்க 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே குடியாத்தம் சேர்த்துவணடை முதல் நெள்ளூர் பேட்டை வரை அமைக்கப்பட்டு வரும் புறவழிச் சாலையின் அருகே பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ராட்சச பள்ளங்கள் தோண்டப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் மொரம்பு மற்றும் மண் மற்றும் சாலை அமைக்கும் பணிக்காக பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இதனால் புதிதாக அமைக்கப்படும் சாலையின் அருகே ராட்சச பள்ளங்கள் தோண்டுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment