வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புகழ்பெற்ற மண்டி தெருவில் சாலை தடுப்பு சுவரில் பொதுமக்கள் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் அதிக அளவில் பயணிக்கும் பொது சாலை என்பதால் பொது மக்கள் ஆண்கள் பெண்கள் அனைவரும் முகம் சுளித்து செல்கின்றனர்.
மலேரியா டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவுவதற்கு 100% வாய்ப்புகள் உள்ளதால் மண்டி வீதியில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதற்கு பொது கழிப்பிடம் அமைத்துத் தர மட்டுமல்லாமல் உடனடியாக சுத்தம் செய்து நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசு அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் கா. குமார் மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பாகவும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கோரிக்கை.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:
Post a Comment