வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக குவிந்த பக்தர்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மலைக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு நள்ளிரவு 12 மணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு விபூதி காப்பு தங்க கவசம் சாத்தப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல் மலையாடிவாரத்தில் தனி சனிதியில் வீற்றிருக்கும் வள்ளியமைக்கு வெள்ளி மூலம் பூசப்பட்ட கவசமும் வெள்ளி கிரீடமும் அணிவிக்கப்பட்டு இருந்தது. கீழ்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment