வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வி.கோட்டா சாலை புத்துக்கோவில் அருகில் மினி லாரியில் நூதன முறையில் ரேஷன் அரிசி 210- கிலோ மற்றும் 50 கிலோ பருப்பு கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி தலைமையில் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் பேரணாம்பட்டு ஆய்வாளர் ரவி ஆகியோர் மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
மினி லாரியில் முன் பகுதியில் ரேஷன் அரிசி மற்றும் பருப்பு மூட்டையை பதுக்கி வைத்து அதற்கு பின்னாடி பழ பிளாஸ்டிக் பெட்டிகளை வைத்து மறைத்து அரிசி மூட்டைகளை சென்றனர். மினி லாரியை மடக்கி வண்டியிலிருந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து குடியாத்தம் நுகர்வோர் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment