வேலூர் லாங்கு பஜாரில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 January 2024

வேலூர் லாங்கு பஜாரில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.


வேலூர் மாவட்டம் லாங்கு பஜாரில் வணிகர் சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த வண்டலூர் அருகே மாமூல் கொடுக்காத மருந்து கடை உரிமையாளரை ரவுடி கும்பல் வெட்டி கொலை செய்தது. இதனை கண்டிக்கும் விதமாக வேலூர் லாங்கு பஜாரில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மருந்து வணிகர் சங்க தலைவர் மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் துரைக்கண்ணன் பொருளாளர் கார்த்தி ஆகியோர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஞானவேலு, செயலாளர் ஏ. வி. எம். குமார், இளைஞரணி செயலாளர் அருண் பிரசாத் வரவேற்புரை ஆற்றினர். வணிகர் சங்க மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர் சரவணன் வணிகர்கள் கடை உரிமையாளர்கள் கலந்து சென்னையில் மருந்து கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க கோரியும் கோஷம் எழுப்பினர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad