வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி கிளப் சார்பில் கண் மற்றும் உடல் தானம் செய்ய பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்த மறுநாள் காலமானவரின் கண் உடல் தானம்.
குடியாத்தம் அடுத்த கன்னிகாபுரம் ஸ்ரீராகவேந்திரா நகர் கே.என்.புருஷோத்தமன் தன் மனைவி சாந்தியுடன் குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் மூலம் இருவருக்கும் கண் மற்றும் உடல் தானம் செய்ய பதிவு செய்து சான்றிதழ் பெற்றுச் சென்றனர்.
அடுத்தநாள் காலை புருஷோத்தமன் இயற்கை எய்தினார். அவர் விருப்பப்படி அவருடைய கண்களை வேலூர் டாக்டர் அகர்வால் மருத்துவமனைக்கும், அவருடைய உடலை வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும் அவரின் மனைவி சாந்தி, மகள்கள் பூங்குழலி, செளந்தர்யா, இந்துமதி ஆகியோர் ஒப்புதலுடன் தானமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சங்க கண் மற்றும் உடல்தானக் குழு தலைவர் எம்.ஆர்.மணி செய்தார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment