வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ குமாரவேல் பாண்டியன் அவர்களும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்களும் 3: 01:2024 இன்று திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் ஒன்றிய குழு பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி வருவாய் கோட்டாட்சியர் மு வெங்கட்ராமன் கே எம் ஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் கே எம் ஜி சுந்தர வதனம் கே எம் ஜி ராஜேந்திரன் பள்ளி தலைமை நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment