வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா இன்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம் எஸ் அமர்நாத் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை ஜி அகிலா வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கல்வி கோ முனவர் ஜி விஸ்வநாதன் வேந்தர் வி ஐ டி பல்கலைக்கழகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மாவட்ட கல்வி அலுவலர் டி நேசபிரபா வருவாய் கோட்டாட்சியர் மு வெங்கட்ராமன் காவல் துணை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி வட்டாட்சியர் சித்ராதேவி புலவர் பதுமனாா் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி நகர மன்ற உறுப்பினர் ஜாவித் அகமத்ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாநில அளவில் வெற்றி பெற்ற ஆறு மாணவிகளுக்கு சான்றுகள் வழங்கினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:
Post a Comment