குழந்தைகளுக்கு பொங்கல் மற்றும் கரும்புகளை வழங்கி பொங்கல் விழா கொண்டாடினார்கள். இந்தியன் ரெட்கிராஸ் சஙத்தின் காட்பாடி வட்ட கிளையின் சார்பில் தமிழகஅரசின் சமூக பாதுகாப்புத்துறையின் வேலூர் மாநகரம், காட்பாடி செங்குட்டையில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் காட்பாடி ரெட்கிராஸ் நிர்வாகிகள் இல்ல மாணவிகளுகளுடன் இணைந்து பொங்கல் விழா, 14.01.2024 காலை 9 மணியளவில் காட்பாடி ரெட்கிராஸ் கிளையின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்று பேசினார். வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் க.அன்பு, முன்னாள் மாமன்ற உறுப்பினர் லோகநாதன், ரெட்கிராஸ் அவை துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். காப்பக மாணவிகளுக்கு பொங்கல் கரும்பு இனிப்புகளை காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் பி.சுமதி மாநகராட்சியின் ஒன்றாவது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னிராஜ் ஆகியோர் சர்க்கரை பொங்கல், பிஸ்கட் பேக், பேனா மற்றும் கரும்புகளையும், வழங்கி பொங்கல் விழா கொண்டாடினார்கள்.
ரெட்கிராஸ் துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.பாரிவள்ளல், பொருளாளர் வி.பழனி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரமேஷ்குமாரஜெயின், டி.லிவிங்ஸ்டன் மோசஸ், டி.செல்வமணி, தணிகை செல்வம், ஆயுள் உறுப்பினர்கள் அந்தோனி பாஸ்கரன், தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், ஆகியோர் வாழ்த்தி பேசினர், குழந்தைகள் காப்பகத்தின் கண்காணிப்பாளர் கே.எ.சாந்தி, நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.
No comments:
Post a Comment