வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டையில் அருள்பாலிக்கும் எல்லாம் வல்ல அன்னை அருள்மிகு படவேட்டு எல்லையம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ ஐயப்ப பக்தர் சபா சார்பில் தீமிதிவிழா திருக்கோயில் வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக மாலை 3 மணிக்கு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பூ கிரகம், அருள்மிகு விநாயகர், அருள்மிகு படவேடு எல்லையம்மன், அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, அருள்மிகு ஐயப்பன், அருள்மிகு வீர ஆஞ்சநேயர், ஆகிய (5) சாமிகள் வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்தனார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment