வேலூர் மாவட்டம் குடியாத்தம் டாக்டர் கிருஷ்ணசுவாமி மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாக அலுவலர் கே.மலர்விழி சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபாடு செலுத்தினார். மாணவ, மாணவிகள் பல்லாங்குழி, கயிறு இழுத்தல், மாட்டுவண்டி பயணம், பம்பரம், உறியடி, ரங்கோலி கோலம், பறையடித்தல், தனி நடனம்,கயிறாட்டம், குத்துப்பாட்டு, கபடி, சிலம்பம் போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டு நடத்தப்பட்டது.
அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர்கள் ஆனந்தி, ரேவதி, சசிகுமார், உஷா, மஞ்சுளா, கவிதா மற்றும் பலர் பள்ளி முதல்வர் எம்.ஆர்.மணி ஆலோசனையில் செய்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment