ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஜெய்பிரகாஷ் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் ராஜேந்திரன் விளக்க உரையாற்றினார். வார விடுமுறை நாட்களுக்கு மாற்றாக கூடுதலாக வேலை செய்ய நாட்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். இஎஸ்ஐ அட்டை வழங்கப்பட வேண்டும் இ எஸ் ஐ மற்றும் PF காக தொழிலாளரிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையை முறையாக கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.
சம்பளத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்வதை கைவிட்டு முறையாக ஏற்கனவே வழங்கப்பட்ட சம்பளத்தை எந்தவித பிடித்தமின்றி வழங்கப்பட வேண்டும். பெண் தொழிலாளர்களிடம் பிடித்தால் செய்யப்பட்ட பேறுகால விடுப்பு சம்பளத்தை திரும்ப வழக்க வேண்டும். கொரோனா பெருந் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட முள் களப்பணியாளர்களுக்கு தமிழக அரசு வழங்கிய ஊக்கத்தொகை ரூபாய் 15 000 அனைத்து சுமித் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
பெண் தொழிலாளர்களிடம் மிக மோசமான வார்த்தைகளை பேசி அநாகரிமாக நடந்து கொள்ளும் சுமித் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:
Post a Comment