வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் 5 வது கட்ட சிறப்பு திட்ட முகாம் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் நகர மன்ற உறுப்பினர் ஜிஎஸ்.அரசு மின்சாரத்துறை உதவி பொறியாளர் சீனிவாசன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் 30 '31"32" 33' 34 ஆகிய 5 வார்டுகளில் இருந்து பொதுமக்கள் குடும்ப அட்டை ஓய்வூதியம் இலவச வீட்டு மனை பட்டாக்கள் போன்ற மனுக்களை அளித்தனர். M M மனுக்கள் 364, M M C மனுக்கள் 1084, மொத்தம்1448 மனுக்கள் பெறப்பட்டன இவைகளுக்கு 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment