வேலூர் மாவட்ட விசுவ இந்து பரிசத் சார்பில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 January 2024

வேலூர் மாவட்ட விசுவ இந்து பரிசத் சார்பில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம்.


வேலூர் மாவட்ட விசுவ இந்து பரிசத் சார்பில் கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவ ரிஷி குப்பம் ராஜா கோவில்  விநாயகபுரம் காந்திநகர் உள்ளிட்ட இடங்களில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் அட்சதை கோவில் படம் ஆகியவை இல்லம்தோறும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட விசுவ இந்து பரிசத் துணைத் தலைவர் ஆர் அண்ணாமலை தலைமை தாங்கினார் .கே வி குப்பம் ஒன்றிய விசுவ இந்து பரிசத் தலைவர் சந்தோஷ் அனைவரையும் வரவேற்றார் விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில செயலாளர் திரு ராஜா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, இல்லம் தோறும் ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் கோவில் படம் அட்சதை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் கே வி குப்பம் ஒன்றிய ஆர்எஸ்எஸ் காரியவாக் மூர்த்தி ராணுவ பிரிவு மாவட்ட துணை தலைவர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பெரியோர்கள் தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் புண்ணியகோட்டி நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad