மகளிர் சிறையிலிருந்து விடுதலையான சிறைவாசியின் மறுவாழ்விற்காக நலதிட்ட உதவி வழங்கப்பட்டது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 13 January 2024

மகளிர் சிறையிலிருந்து விடுதலையான சிறைவாசியின் மறுவாழ்விற்காக நலதிட்ட உதவி வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்த நாளினை முன்னிட்டு வேலூர் மகளிர் சிறையிலிருந்து அரசின் முன்விடுதலையில் மகளிர் சிறையிலிருந்து விடுதலை பெறும் ஒருவருக்கு மறுவாழ்விற்காக தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் ஒரு மாதத்திற்கான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அரிசி பருப்பு, புளி கடலை எண்ணெய் உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் டி.எம்.விஜயராகவலு தலைமை தாங்கினார். முன் விடுதலைக்கான ஆணையும் மேலும் அவர் சிறையில் செய்த வேலைகளுக்காக உழைப்பூதியத்துக்கான  தொகையினையும் வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொ) எ.எஸ்.அப்துல்ரஹ்மான் வழங்கினார்.

 

மகளிர் சிறை அலுவலர் ஆர்.நீலாமணி  உதவி சிறை அலுவலர் அன்புசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வின் போது செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் பொருளாளர் முனைவர் ஆர் சீனிவாசன் ஆகியோர் அரிசி பருப்பு, உப்பு புளி மிளகாய், உள்ளிட்ட 21 வகையான மளிகை பொருட்களை வழங்கினார்கள். திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டத்தை சார்ந்த திருமதி.ஆர்.தனலட்சுமி க/பெ. ஏழுமலை (வயது 43) ஆயுள் தண்டனை சிறைவாசியான இவர் 17 ஆண்டுகள் சிறைவாசியாக இருந்து அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு  தமிழ்நாடு அரசின் முன்விடுதலை திட்டத்தின் கீழ் இன்று விடுதலையானார்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad