தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காட்பாடி ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 7 January 2024

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காட்பாடி ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு.


வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்க காட்பாடி ஒன்றிய கிளையின் மாநாடு இன்று காட்பாடி செங்குட்டை திருவள்ளுவர் நூலக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கவிமாமணி அறிவுச்சுடர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முனைவர் பெ.அமுதா, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி.முனிசாமி, ஆக்ஸிலியம் கல்லூரி கிளை செயலாளர் காயத்ரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.


பின்வரும் நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், தலைவராக செ.நா.ஜனார்த்தனன்,  கௌரவ தலைவராக அறிவுச்சுடர், செயலாளராக  ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளராக எம்.ஈஸ்வரி துணைத்தலைவர்களாக எஸ்.எஸ்.சிவவடிவு, வாசுகிசந்திரசேகர், இணை செயலாளர்களாக பிரகாஷ், எம்.சகிலாவாணி, செயற்குழு உறுப்பினர்களாக டி.முத்து, புனிதா, சுகுணலதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


  1. காட்பாடியில் நஞ்சில்லா விவசாய விளைபொருட்களை நேரடியாக வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யும் வகையில் நடைபெற்று வரும் மக்கள் நல சந்தை மேலும் வளர்ச்சி பெற இணைந்து செயலாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.
  2. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வாசிப்போம் நேசிப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களிடையே செய்தி ஏடுகள், நூல்கள் படிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்க பிரச்சார இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 
  3. ஆண்டு தோறும் நிழல் இல்லா நாட்கள், அறிவியல் கருத்துகள், குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் நிகழ்வுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என தீர்மானிக்கப்பட்டது.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad