குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே சி பிரேம்குமார் தலைமை தாங்கினார். சிறப்புரை மாவட்ட துணை செயலாளர் CPI துரை செல்வம், ஒ.நகர செயலாளாா் CPI டி ஆனந்தன் பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் எஸ் பன்னீர்செல்வம் எஸ் மகேஷ் பாபு கல்பனா சங்கர் நிறைமதி செல்வன் நா பரமசிவம் ஸ்ரீ கருணாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஒன்றிய அரசு தமிழக அரசு பயனற்ற உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிடு கலைஞர் வழங்கிய விவசாய தொழிலாளர் நல வாரியத்தை செயல்படுத்திடு 100 நாள் வேலை திட்டத்தின் கூலி பாக்கியை உடனே வழங்கிடு என்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment