தமிழ்நாடு வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைத்து கூட்டமைப்பு சார்பாக அறவழி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இன்று காலை புதிய பஸ் நிலையம் எதிரில் அற வழி கவன ஈர்ப்பு போராட்டம் மற்றும் நடைப்பயணம் கருப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்கத்தின் தலைவர் சி கே பாபு தலைமை தாங்கினார்.
மகாத்மா காந்தி சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தின் செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். நமது உரிமை வாகன ஓட்டுநர் சங்கத்தின் செயலாளர் பாபு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஓட்டுநர்களின் நலனுக்காகவும் தீர்மானிக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- மத்திய அரசு கொண்டு வந்த B N S 106 ( 2 )ஹிட் ரன் புதிய மசோதாவை திரும்ப பெற வேண்டும்
- ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கட்டாயம் நிறைவேற்றி அரசு இதழில் வெளியிட வேண்டும்
- இரவு பகலாக பணி செய்யும் எங்களுக்கு தேசிய ஓட்டுநர்கள் தின உருவாக்கி அரசுகளில் வெளியிட வேண்டும்
- வெளி மாநிலத்திற்கு செல்ல ஓட்டுனர்களாகிய எங்களுக்கு தபால் ஓட்டுரிமை வழங்க வேண்டும்
- பணியில் இருக்கும் ஓட்டுனர்களை தாக்கும் நபர் யாராக இருப்பினும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுவதோடு ஐந்தாண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கிட சட்டம் இயற்றிட வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியில் வினோத்குமார் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment